ex post facto experiment
கடந்த காலநேர்வை / தன்மையை வைத்து நடத்தப்படும் பரிசோதனை
தமிழ் விளக்கம்
விளைவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளைப் புதிதாக அறிமுகப்படுத்தி சோதனைக்குட்படுத்தாமல், விளைவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளை ஏற்கெனவே உள்ளடக்கிய குழுவைத் தேர்ந்துடுத்து பரிசோதனையைச் செய்தல். உதாரணமாக அதிக உடலெடை மனதில் / மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பரிசோதிக்க, உடலெடை (independent variable) என்ற மனதைப் (dependent variable) பாதிக்கின்ற தன்மையைப் பரிசோதிக்க, பரிசோதனைக் குழுவின் உடல் எடையைக் கூட்டி விளைவுகளை அறிவதற்கு பதிலாக, அதிக உடல் எடை கொண்டவர்களையே பரிசோதனைக் குழுவாகத் தேர்ந்தெடுத்து, அதிக உடல் எடை என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை சோதித்தரிய முயல்வது.
English
In research, an experiment conducted after the event being tested has already occurred. Thus, the experimenter cannot introduce the experimental stimulus but attempts to control, sometimes statistically, all extraneous factors.