expatriation
நாட்டைவிட்டு வெளியேறுதல், தாயகத்துறப்பு, விவாசனம்
தமிழ் விளக்கம்
இது பல பொருள்களில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. இது இலத்தீன் வார்த்தையான ex (வெளியே) மற்றும் patria (தந்தையர் நாடு) என்பதன் சேர்க்கை. ஒரு நபர் பலகாரணங்களால் தன்னுடைய தாய்நாட்டை விட்டு வெளியேறலாம். வெளியேறும்பாடி நிர்பந்திக்கப்படலாம். இருப்பினும் expatriation என்னும் சொல், பொதுவாக சிறப்புத் தொழிலினர் (professionals), தன்னிச்சையாகவோ, பிறரின் / நிறுவனங்களின் ஏற்பாதரவினாலோ வெளிநாட்டில் வேலைசெய்ய, தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ செல்லும் நிலையைக் குறிக்கும். நிபுணத்துவமற்ற உடலுழைப்புத் தொழிலாளர்கள் புலம் பெய்ர்ந்த தொழிலாளர்கள் (migrant workers) என்றழைக்கப்படுவார்கள். .
English
The process of leaving one's native country and living elsewhere, usually permanently.