expenditure

செலவிடுதல், பயன்படுத்தித் தீர்த்தல், செவழிவு, செலவினம், செலவிடப்பட்ட தொகை

தமிழ் விளக்கம்

ஒரு பொருளை வாங்கும்போதோ, ஒரு சேவையைப் பெரும்போதோ செலுத்தும் கட்டணத்தைச் செலவினம் என்பர். சமூக சேவை நிறுவனங்களில் இரண்டு விதமான செலவினங்கள் செய்யப்படுகின்றன. ஒரு நிறுவனம் தன் வாடிக்கையாளருக்குத் தரமான சேவைகளை வழங்க கட்டமைப்பு வசதிகளை (கட்டிடங்கள், வாகனங்கள், தொடர்பு வசதிகள்) மேம்படுத்தூம் செலவினங்களை மூலதனச் செலவினங்கள் என்றும், பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், மற்றும் பராமரிப்புச் செலவினங்களை வருவாய் செலவினங்கள் என்றும் பிரிப்பர்.

English

A payment, or obligation to pay, for some goods or services received. For example, a social agency budgets for specific anticipated operating expenses. Capital expenditures are those the social agency makes to acquire or improve a relatively permanent asset, such as the building where the agency's activities take place. Revenue expenditures are those the agency makes from its operating budget for such purposes as expendable supplies.