experiential therapy
அனுபவ சிகிச்சை
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளரை ஒன்றைச் செய்ய வைத்து, அந்தச் செயல் அனுபவத்தை வைத்தே சிகிச்சை வழங்கும் முறை. வாடிக்கையாளர்களிடம் ஒரு செயலை நடித்தோ அல்லது பாவனை காட்டச் சொல்லியோ, உருவங்களின் மீது அவரின் எண்ணத்தை வெளிப்படுத்தச் சொல்லியோ, மேடை ஒப்பனைப் பொருட்களைத் தேர்வு செய்யச் சொல்லி அதனுடைய காரணத்தை அறிந்தோ, பிற செயல்பாடுகளில் ஈடுபடச் செய்தோ, அதன் மூலம் அவர் பெற்ற அனுபவத்தை, அவரின் ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்பு படுத்தி அனுபவ ரீதியாகச் சிகிச்சை அளிக்கும் முறை.
English
A form of psychosocial intervention or clinical treatment that emphasizes activity, acting out of conflicts and situations, role playing, confrontation, and simulating situations that are similar to the frequent life experiences of the client. Experiential therapies focus on the “here and now” and discourage the client from relying solely on a description of past circumstances. Experiential therapies often occur in group therapy or family therapy settings.