expressed need

வெளிப்படுத்தப்பட்ட தேவைகள், வார்த்தைகளில் தெரிவிக்கப்பட்ட / வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட / சைகை மூலம் தெரிவிக்கப்பட்ட தேவைகள்

தமிழ் விளக்கம்

ஒரு சேவை அல்லது வசதி தங்களுக்குத் தேவை என்பதை மக்கள் உணர்ந்திருப்பதையும், அதை அவர்கள் எப்படி பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் அறிகுறி. இதை, ஒரு சேவையைப் பெற எவ்வளவு பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்திருக்கின்றார்கள் என்பதிலிருந்தும், எவ்வளவு பேர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வரிசையில் நிற்கின்றார்கள் என்பதிலிருந்தும், எத்தனை மனுக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியிருக்கின்றார்கள் என்பதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

English

An indication of the degree to which needs exist and the number of people who perceive themselves to have the need as revealed by specific factors. These factors might include the number of people who wait in lines to ask for a service, the amount of money most people seem willing to pay, or the obstacles clients need to overcome to acquire the services.