extended-care facilities (ECF)

நீடித்த பராமரிப்பு / மருத்துவ வசதிகள்

தமிழ் விளக்கம்

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கின்ற நோயாளிகள், நோயிலிருந்து மீண்டு உடல் தேறி வருபவர்கள், புனர்வாழ்வு தேவைப்படுபவர்கள் போன்றோருக்கு நீடித்த மருத்துவப் பராமரிப்பு வசதிகள் செய்து தரும் மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள். 100 நாட்கள் வரை மருத்துவமனை அல்லது நலம் பேணகத்தில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதை நீடித்த மருத்துவப் பராமரிப்பு என்கின்றனர். அமெரிக்க அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் நீடித்த மருத்துவச் சிகிச்சையைப் பெறவேண்டினால், அரசின் தரநிர்ணயத் தகுதி பெற்ற மையங்களில் தான் பெறவேண்டும். அந்த மருத்துவ மையங்களில் தகுதி பெற்ற மருத்துவ இயக்குனர், பதிவுபெற்ற செவிலியர், பலநிலை செவிலியப் பணியாளர்கள், தகுதிபெற்ற உணவியல் நிபுணர் (dietician), உடலியக்க சிகிச்சையாளர் (physiotherapist), தொழில் சிகிச்சையாளர் (occupational therapist), சமூகப்பணி இயக்குனர் போன்ற திறத் தொழிலினர் பணியாற்ற வேண்டும். நீடித்த மருத்துவ சிகிச்சை அரசு அமைப்புகளாலும், பிற காப்பீடு துணை அமைப்புகளாலும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் தான் காப்பீட்டுப் பயன்கள் கொடுக்கப்படும்.

English

Nursing homes for patients who need to remain in a residential care facility for extended periods, up to 100 days. To receive the ECF designation and thus be eligible for Medicare reimbursement, the facility must meet special federal and state certification standards. It must have staffs that usually include a medical director; registered nurse, nursing director, nursing supervisor, and skilled nursing staff; dietician; physical therapist; occupational therapist; and a director of social services. ECFs are subject to utilization review by government bodies and third parties. See also skilled-nursing facility.