externality
வெளிப்புறத்தே உள்ள ஒன்று
தமிழ் விளக்கம்
பொருளாதாரத்தில் ஒரு செயல் நடந்தேறும்போது, அந்தச் செயலின் நன்மை தீமையைச் செலவழித்து பெறாமலும், இழப்பு ஈடுசெய்யப்படாமலும், அந்தச் செயலுக்கு தொடர்பில்லாதவர்கள் அனுபவிக்கும் நிலை. இது, 1. நேர்மறை வெளிப்பாடு - பயன்கள் மற்றும் சமூக நலம் (positive externality) 2. எதிர்மறை வெளிப்பாடு - இழப்புக்கள், சுற்றுச் சூழல் சீர்கேடு (negative externality) என்று இருவகைப்படும். சமூகப்பணியில், குறிப்பாக சமூக குழுப்பணியில், குழுப்பணியில் தான் கற்ற அனுபவத்தை, பயன்தரும் விசயங்களை வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய குடும்பத்திலோ, நண்பர்களிடத்திலோ அல்லது தான் வாழும் சமுதாயத்திலோ கடைபிடித்து ஒரு செயலின் விளைவை விரிவாக்குவது. இது நேர்மறை வெளிப்பாடாகும். சமூகப்பணியாளர்களின் அணுகுமுறையே தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை வைத்து நேர்மறையான பயன்தரும் விளைவுகளைச் சுற்றிலும் ஏற்படுத்துவதுதான்.
English
The concept in social group work in which the members apply what they have learned from their experiences in the group to their worlds outside the group and use their newly acquired skills to relate more effectively with their families and their communities.