extortion
பலாத்காரத்தினால் (பணம்) பறித்தல், வன்பறிப்பு, அச்சுறுத்திப் பறித்தல், வலிந்து பறித்தல், மிரட்டிப் பறித்தல், பிடுங்குண்ணுதல்
தமிழ் விளக்கம்
ஒருவரைக் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, மிரட்டியோ அவரிடமிருந்து பணத்தையோ, உடமைகளையோ அபகரித்தல். இது திருட்டிலிருந்து வேறுபட்டது. திருட்டில், பொருளை பறிகொடுத்தவர் அறியாமலே பொருள் பறிபோகும். வன்பறிப்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக, அதை எதிர்த்தால் வன்முறை பிரயோகிக்கப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு உடன்படவேண்டிய நிலை.
English
The crime of illegally taking money or other property from another person by using fear, coercion, or threats. Extortion is generally synonymous with blackmail; it differs from robbery in that the immediate personal and physical safety of the victim is not at risk.