extrapolation
அறிந்த ஒன்றிலிருந்து அறியாதவற்றை பொதுப்படுத்துதல், புறச் செருகல், புறமிருந்து சேர்த்தல், புறவைப்பு, புறமதிப்பிடல், மிகை நீட்டம்
தமிழ் விளக்கம்
கையிலிருக்கும் ஆதாரங்களை வைத்தும், அதைக் கடந்தும், சில அனுமானங்களை முன்வைத்தல். உதாரணமாக, தான் நோயால் அவதிப்படுவாதாகச் சொல்லும் வாடிக்கையாளரின் கடந்த கால மருத்துவக் குறிப்புகளைப் பார்த்துவிட்டு, அவர் நோய்பீதி உள்ளவர் (hypochondriasis) என்று குறிக்கப்பட்டிருப்பதால் அவர் சொல்வது சந்தேகத்திற்கு இடமாளிப்பதாகச் சமூகப்பணியாளர் கருத்து தெரிவிப்பது.
English
Making inferential estimations based on, but beyond the scope of, available data. For example, a social worker might conclude that a client is not really as ill as claimed solely because the case record indicates a tendency toward hypochondriasis.