face validity
பார்வையிட்டு செல்லத்தக்கது என்று ஏற்றுக்கொள்ளல்
தமிழ் விளக்கம்
(face validity முக தாட்சன்யம் vs rational validity அறிவு சார் ஏற்புடைமை). ஒரு கருவியைப் பார்த்த உடனே, உத்தேசிக்கப்பட்ட வேலையை அது செய்யுமா என்று கணிப்பது. ஒரு ஆய்விற்கான தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படவுள்ள கருவியை (உ.ம். கேள்வித்தாள்) பார்த்த மாத்திரத்திலே, அல்லது மேலோட்டமாகப் புரட்டிய உடனே, ஆய்வாளர் அளவிட, தெரிந்துகொள்ள விரும்பிய தகவல்களைச் சேகரிக்குமளவு அதன் உள்ளடக்கம் இருப்பதாக உணர்ந்தறிவது.
English
A simple method for assessing the validity of a scale or instrument, in which the researcher using his or her professional judgment alone accepts the instrument as valid if it looks or sounds valid.