facilitation
துணை தந்து ஊக்குதல், எளிதாக்கல், இயல்பாக நடக்கும் ஒன்றை முடுக்கி / தூண்டி விடல், சௌகரியப்படுத்துதல், சுலபமாக்குதல்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியில் வாடிக்கையாளர் (தனிநபர், குடும்பம், சமுதாயம்) பிரச்சனையில் 'தலையிடுதல் - intervention' என்பது உதவி செய்தலாகும். உதவி என்ற செயலுக்கு பலவடிவங்களுண்டு. வாடிக்கையாளரே தன் பிரச்னையைக் கையாளுமளவுக்குத் துணை தந்து ஊக்குவித்து எளிதாக்குவது உதவியின் வழிமுறை. வாடிக்கையாளர் தொடர்புடைய அனைத்தையும் அறிந்துகொண்டு, அதில் இடையாடி, வாடிக்கையாளர் பிரச்சனை தீர அவருக்குச் சாதகமான தொடர்புகளை வலுப்படுத்தவும், தேவைப்படின் புதுத் தொடர்புகளை உருவாக்கவும் சமூகப்பணியாளர் முயல்வர். இதற்காக வாடிக்கையாளருக்கு ஆதரவாகப் (supporter) பேசியும், வாடிக்கையாளர் சார்பாக பிறரிடம் மத்தியஸ்தம் (mediator) செய்தும், வாடிக்கையாளருக்காகப் பிறரிடம் எதையாவது (broker) பெற்றும், வாடிக்கையாளர் தன் பிரச்சனையிலிருந்து விடுபட அவரை இயலுமையாக்கியும் (enabler) சமூகப்பணியாளர் செயல்படுவார். பிரச்சனையை எளிமையாக்க பல முன் நடவடிக்கைகளைச் செய்யவேண்டும். வாடிக்கையாளர் தன்னைப்பற்றிய தகவல்கள், தன்னுடைய கருத்துக்கள், உணர்வுகளை வெளியிட ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல், வாடிக்கையாளரின் நடத்தையை (ஆழ்மன நோக்கில்) விளக்குதல், வாடிக்கையாளரின் சூழ்நிலையை மனதில் கொண்டு மாற்று வழிகளை பிரேரிபித்தல், வாடிக்கையாளரை ஊக்கப்படுத்தி மனதைத் திடமாக்குதல், பிரச்சனைகளை அறிவுபூர்வமாக (தருக்க ரீதியாக) புரிந்துகொள்ள உதவுதல், வாடிக்கையாளரோடு ஒத்துழைக்கவும் அவருக்காக மத்தியஸ்தம் செய்ய உதவும் புதிய தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தல் போன்ற செயல்களெல்லாம் துணை தந்து ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் அடங்கும்.
English
An approach to social work intervention in which the social worker stimulates and mediates linkages between client systems, helps develop new systems, or helps strengthen existing ones. The social worker acts as an enabler, supporter, mediator, and broker for the client, paving the way for the client to reach desired goals. Facilitation activities include eliciting information and opinions, encouraging the expression of feelings, interpreting behavior, discussing alternative courses of action, clarifying situations, providing encouragement and reassurance, practicing logical reasoning, and recruiting members, usually within the context of a collaborative or bargaining relationship.