family
குடும்பம், இரண்டு பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஒன்றாக வாழும் அலகு, ஒரு பொதுவான மூதாதையர் வழிவந்த சந்ததிகள்
தமிழ் விளக்கம்
மனித சமூகத்தில் குடும்பம் என்பது இரத்த உறவினாலோ (ஒரு தாய்க்கோ தந்தைக்கோ பிறத்தல்), திருமண உறவினாலோ, அல்லது ஓரிடத்தில் வளர்வதாலோ இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் / அல்லது ஒரு குழுவுக்குள் ஏற்படும் இணைப்பு. நெருங்கிய குடும்பம் என்பது கணவன், மனைவி, பெற்றோர், சகோதர, சகோதரி, மகன் மற்றும் மகள் கொண்டதாகவும், நீட்டிக்கப்பட்ட அல்லது விரிவான குடும்பம் என்பது தாத்தா பாட்டி, அத்தை, மாமா, சகோதரர் மனைவி (அண்ணி), சகோதரி கணவர் (மைத்துனர்) அவர்களின் குழந்தைகள் கொண்டதாகவும் அமையும். பெரும்பாலான சமூகங்களில் குடும்பமே குழந்தைகளை வளர்த்தெடுத்து சமூகமயமாக்கும் நிலையம். ஓரிடத்தில் வசிக்கின்ற, ஒருவருக்கொருவர் பொறுப்பாக, கடமைகளைப் பகிர்ந்துகொள்ளும் குழுவைப் பொதுவாகக் குடும்பம் என்ற சொல்லால் குறிக்கின்றனர். தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனம் (The National Association of Social Workers (NASW) 'குடும்பம் என்பது இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ தங்களைக் குடும்பமாகக் கருதி, ஆரோக்கியமான குடும்ப வாழ்விற்கு உதவுவதான குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை சமூகமயமாக்கல், வருமானமீட்டல் மற்றும் ஆதரவு, காலக்கட்டுப்பாடின்றி செய்து கொள்ளும் பராமரிப்பு போன்ற பொறுப்புக்களையும், கடமைகளையும் செய்ய ஒப்புக்கொண்ட குழு' என்று வரையறுத்துள்ளது
English
A primary group whose members assume certain obligations for each other and generally share common residences. The National Association of Social Workers (NASW) Commission on Families (Promoting Family Supports Statement, 1990) defines a family as two or more people who consider themselves family and who assume obligations, functions, and responsibilities generally essential to healthy family life. Child care and child socialization, income support, long-term care (LTC), and other caregiving are among the functions of family life.