family allowance

குடும்ப உதவித் தொகை

தமிழ் விளக்கம்

உலகெங்கிலுமுள்ள சமூகநல அரசுகள் தங்களுடைய மக்களுக்கு அவர்களின் வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யும் நலத்திட்ட உதவிகள். இந்த உதவிகள் அந்தந்த நாட்டின் சமூக நலக் கொள்கைகளின் அடிப்படையில் வேறுபட்டிருக்கும். சில நாடுகளில் ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து அதிக உதவித் தொகையும், சில நாடுகளில் அரசு வரையறுத்த எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு உதவியைக் குறைத்தும், சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வருமானத்திற்கு மேல் குறிப்பிட்ட வருடத்தில் வருமானமீட்டும் குடும்பங்களுக்கு அந்த ஆண்டு பெற்ற உதவியை நிறுத்தியும், அல்லது பெற்ற உதவியை திருப்பிக்கட்டும்படியான பல்வேறு முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த மாதிரியான demogrant, குழந்தைகளுக்கான நல உதவிகள், மகப்பேறுகால உதவிகள் என்று பல பெயர்களில் வழங்கப்படுகின்றது

English

A demogrant form of benefit in many nations, not including the United States, in which every eligible family, regardless of financial need, is allocated a specified sum of money. There are many variations to this system depending on the nation's social policy goals. These variations include making higher payments for families with more children, reducing payments if families have more than a prescribed number of children, and requiring families whose income exceeds a certain amount to pay back the family allowance at tax time. In some nations, these programs are known as children's allowances or maternity benefits.