family map

குடும்ப வரைபடம்

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்தின் கட்டமைப்பைப் பற்றி சுய விளக்கமளிக்கும் வரைபடம். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவு முறையை, வட்டங்கள், சதுரங்கள் மற்றும் கோடுகள் போன்ற குறியீடுகளின் மூலமாக விளக்குவது. இது genogram என்றும் சொல்லப்படும் ஒரு குடும்பத்தின் மரபுவழிக் கட்டமைப்பை / தலைமுறைத் தன்மையை விளக்கும் வரைபடம். ஒரு குடும்பத்தின் பல தலைமுறையைச் சேர்ந்தவர்களின், ஆளுமைப் பண்புகள், நடத்தைப் போக்குகள், (திருமணம், விவாகரத்து) தற்போதைய தலைமுறையின் மீது செலுத்தும் தாக்கம், போன்றவற்றை இந்த வரைபடத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

English

A pictorial representation of the way a family is structured around a specific problem or concern. Each member of the family is represented by circles or squares, and the type of relationship that tends to exist between them is illustrated by drawing various types of lines.