family myths

குடும்பத்தைப் பற்றிய தொன்மங்கள் / கதையாடல்கள்

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்தைப்பற்றி நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்ளப்படும் உண்மையானதாகவோ, இட்டுக்கட்டியோ கூறப்படும் மரபு வழிக்கதையாடல்கள். இந்த நம்பிக்கைகள் குடும்ப ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களின் நடத்தை மீதும், பிற செயல்பாடுகளின் மீதும் நேர்மறையானதாகவோ, எதிர்மறையானதாகவோ தாக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால்தான் குடும்ப சிகிச்சை மேற்கொள்ளும் சமூகப்பணியாளர்கள் குடும்பங்களைப் பற்றிய கதையாடல்களை அறிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மேற்கொள்வார்கள்

English

A family therapy concept pertaining to a set of beliefs, based on distortions of facts or history, shared by members of a family. These beliefs serve to enforce the family rules that influence the way the members interact and ensure cohesiveness and stability in the family. (For example, one family might believe and communicate the view that its male members are less assertive than its female members.) The family members may be aware that these ideologies are inaccurate, but they are allowed to go unchallenged to preserve the existing family structure.