family sculpting
குடும்பப் பாவனை, குடும்பப் படிமம்
தமிழ் விளக்கம்
ஒரு குடும்பத்திலுள்ள உறவுமுறைகளையும் தொடர்பாடல்களையும் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவரைப் போல் இருக்கும்படியான பாவனையை வரவழைத்து, ஒரு வாழ்க்கைக் காட்சியமைத்து, அதன் மூலம் அந்த குடும்பத்தைப் பற்றி மதிப்பீடு செய்து அதனடிப்படையில் கொடுக்கப்படும் குடும்பச் சிகிச்சை முறை. (வீதி நாடகம் போன்ற படிம அமைப்பு).
English
An evaluation and intervention technique in some forms of family therapy in which family members are asked to position and choreograph the movements of other family members and to form a living tableau of people that reflects the communication and relationship patterns in the family unit.