family secrets
குடும்ப ரகசியங்கள்
தமிழ் விளக்கம்
எந்த ஒரு செய்தி குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவருக்குமோ, அல்லது ஒரு சிலருக்கோ அதிர்ச்சியையோ, மன வருத்ததையோ தருமென்று கருதப்படுகின்றதோ அது குடும்ப இரகசியம் எனப்படும். இந்த இரகசியங்கள் பெரும்பாலும் விலக்கப்பட்ட / தடைசெய்யப்பட்ட நடத்தைகளான, குடும்ப உறுப்பினர் ஒருவரின் தன்பாலின இச்சை, கூடா ஒழுக்கம், விவாகரத்து, மனநலப் பிறழ்வு, குற்ற நடத்தை, போதைப் பழக்கம், மிதமிஞ்சிய பாலியல் இச்சை மற்றும் மதுபழக்கம், கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம், இணைந்து வாழ்தல், பிறரை உடல் மன சித்திரவதைக்குள்ளாக்கியது போன்ற நடத்தைகள் தொடர்புடையதாயிருக்கும். குடும்பங்களின் தன்மையைப்பொறுத்து இந்த இரகசியங்கள் காக்கப்படுவதும், பகிர்ந்துகொள்ளப்படுவதும் மாறும். இந்த இரகசியங்கள் குடும்பத்தில் பகிர்ந்து கொள்ளப்படாமல் சமூகப்பணியாளரிடமோ, சிகிச்சை அளிப்பவரிடமோ பகிர்ந்து கொள்ளப்படும் போது, அவருக்கு தொழில் சார்ந்த தர்மசங்கடம் உருவாகும். ,
English
A family therapy concept pertaining to shared but concealed beliefs and perceptions that some or all of the family members may hold but hide from one another to achieve certain family interactions.