Family Service America (FSA)
அமெரிக்காவின் குடும்பச் சேவை அமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் குடும்பச் சேவை அமைப்பு பல்வேறு குடியிருப்புகளில் (சமுதாயங்களில்) கிளைகளைக் கொண்டுள்ள, நிபுணர்களையும், குடும்ப விவகாரங்களிலும், குடும்பங்களுக்கு உதவுவதிலும் அக்கறை கொண்ட தன்னார்வத் தொண்டர்களையும் உள்ளடக்கிய மிகப் பெரிய அரசுசாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம். இது ஆரம்பத்தில் அறச் செயல்களுக்கான தேசிய அமைப்பாக 1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1983 ஆம் ஆண்டு குடும்பச் சேவை அமைப்பு என்று பெயர் மாற்றம் பெற்றது. இதனுடைய கிளை அமைப்புகள் சமுதாய சேவை, குடும்பச் சிகிச்சை மற்றும் திருமணத் தொடர்பான (தாம்பத்தியம்) பிரச்சனைகளுக்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் தருகின்றன. தேசிய நிறுவனம், கிளை அமைப்புகள் மற்றும் உறுப்பினர் அமைப்புகளின் சேவைத் தரத்தை கண்காணிப்பதும், பொதுஜனத் தொடர்பு, பயிற்சிகள், ஏற்பாதரவுடன் கூடிய ஆய்வுகள் (sponsored research) மற்றும் பிரசுர வெளியீட்டுப் பணிகளையும் செய்கிறது. இதனுடைய நிர்வாகக்குழு குடும்பங்களுக்கான அரசின் நலத்திட்டக் கொள்கை வடிவமைப்பதிலும், குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான சட்ட வரைவாளர்களுக்கு ஆலோசனையும், வழிகாட்டாலும் செய்கின்றது.
English
The national organization comprising privately funded, local family service organizations in most larger communities in the United States, plus professionals and private citizens interested in social services for families. Formerly known as the Family Service Association of America, FSA was established as an outgrowth of the National Association of Societies for Organizing Charities in 1911 and took its present name in 1983. Its member agencies provide family therapy and marital therapy, guidance and educational programs, and social services to the community. The national organization sets standards for member agencies, provides public relations and educational programs, and sponsors research and publications. Its board helps set policy and advise lawmakers about family needs.