family therapy

குடும்பச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடையுள்ள பரஸ்பரத் தொடர்பாடலையும், உறவாடலையும் மேம்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு வடிவமைக்கப்பட்ட உளவியல் சிகிச்சை முறை. இது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் தொடர்புகளைப் பரிசீலித்து, பரஸ்பர மற்றும் ஏற்றெதிர் (reciprocal obligations) கடமைகளை விளக்கி, குடும்ப உறுப்பினர்களுக்குள் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க (நிலைமைக்குத் தக்கபடி வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய), நடத்தைப் போக்குகளை ஊக்குவிக்கின்றது. பிரச்சனைக்கான பின்னணிக் காரணத்தை (குடும்ப வரலாறு) முழுக்கச் சார்ந்திராமல், உறுப்பினர்கள் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும், சொல்லாமல் மறைத்தைதையும் கவனத்துடன் ஆராய்ந்து, 'இங்கே இப்பொழுது' என்ன தேவைப்படுகிறது என்பதையறிந்து செய்யப்படும் சிகிச்சை. சமூகஉளவியல், நடத்தையியல், அமைப்பியல் கண்ணோட்டங்களின்படி சிகிச்சை முறைகளும் வேறுபடுகின்றன. சில செல்வாக்குமிக்க குடும்பச் சிகிச்சையாளர்கள் சால்வடார் மினிசின் (கட்டமைப்புக் குடும்பச் சிகிச்சை), ஜே ஹேலி (மூலோபாயக் குடும்பச் சிகிச்சை), வர்ஜினியா சதிர் மற்றும் பாலோ ஆல்டோ குழு, முர்ரே போவன், கார்ல் விட்டேகர், ஹென்றி டிக்ஸ், மாரா செல்விணி, மற்றும் பெக்கி பாப் போன்றவர்கள்.

English

Intervention by a professional social worker or other family therapist with a group of family members who are considered to be a single unit of attention. Typically, the approach focuses on the whole system of individuals and interpersonal and communication patterns. It seeks to clarify roles and reciprocal obligations and to encourage more-adaptable behaviors among the family members. The therapist concentrates on verbal and nonverbal communications and on the“here and now”rather than on family history. Variations in family therapy techniques are practiced by proponents of psychosocial, behavioral, systems, and other orientations. Some of the more-influential family therapy“schools”have been influenced by Salvador Minuchin (structural family therapy), Jay Haley (strategic family therapy), Virginia Satir and the Palo Alto Group, Murray Bowen, Carl Whittaker, Henry V. Dicks, Mara Selvini-Palazzoli, and Peggy Papp.