family violence
குடும்ப வன்முறை
தமிழ் விளக்கம்
திருமண பந்தத்தாலோ, ஒன்றிணைந்து வாழ்வதாலோ, உடனிருத்தலாலோ, குடும்பத்தில் உறுப்பினராயிருப்பதாலோ அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் சகலவிதமான அத்துமீறல்கள் உடல் ரீதியான வன்முறைகள், (அடித்தல், உதைத்தல், கடித்தல், தள்ளிவிடல், அறையில் பூட்டிவைத்தல், பொருட்களை எறிதல், அல்லது அந்த மாதிரி செய்வதாக அச்சுறுத்தல்) மிரட்டல், இரகசியச் (வேவு பார்த்தல்) செயல்பாடுகள், புறக்கணித்தல், பாலியல் மற்றும் உணர்வு ரீதியாகப் பலவந்தப்படுத்தல், வன்புணர்ச்சி, பொருளாதார இழப்பேற்படுத்துதல் போன்ற செயல்களைக் குடும்ப வன்முறை எனலாம்.
English
Aggressive and hostile behaviors between members of a family that result in injury, harm, humiliation, and sometimes death. These behaviors may include physical abuse, rape, destruction of property, and deprivation of basic needs.