family welfare

குடும்ப நலம்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியின் துவக்க காலத்திலிருந்து செய்யப்பட்டு வரும் பன்முகத்தன்மை கொண்ட பணி. திருமண ஆலோசனை, பெற்றோருக்கான பயிற்சி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, பொருளாதார உதவி, மருத்துவ உதவி என்று குடும்பத்தின் கட்டமைப்பைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் எல்லாம் குடும்ப நலம் என்ற சொல்லில் அடங்கும். இந்த நலப் பணிகளை, சமூகப்பணியாளர்கள் அரசுத் துறைகளின் மூலமாகவோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ செய்வர்.

English

One of professional social work’s first designated fields of practice. The activities include marriage counseling, parent training, and child protective services (CPS), as well as helping clients get access to financial assistance, health care, educational provisions, and employment. Family welfare work takes place in public and private agencies such as departments of public assistance and family service organizations.