FAO

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம்

தமிழ் விளக்கம்

இத்தாலியிலுள்ள ரோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டியங்கும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை (போஷாக்கை) அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை (விவசாய) மற்றும் உணவுப் பொருட்தயாரிப்பு, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன், கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை நீக்கப் பாடுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பளிகள், உணவு, வீடுகள், சிறகவரை போன்றவற்றை தேவையானவர்களுக்கு இவ்வமைப்பினூடாக வழங்கியுள்ளன. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது 'ரொட்டி ஆவது கிடைக்க வேண்டும்' என்பதாகும்.
இவ்வமைப்பானது 1945 இல் கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. சிலகாலம் வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டும், பின் 1951 ஆம் ஆண்டு முதல் ரோமைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. 190 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்டது. இந்த அமைப்பு துவங்குவதற்க்கான முதல் விதை 1971ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த ஐரோப்பிய வேளாண் மாநாட்டில் (European Confederation of Agricultire) கலந்துகொண்ட அறிஞர்களால் ஊன்றப்பட்டது. இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள் 1. வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரித்தல் 2. ஊட்டசத்து (போஷாக்கு), உணவு, விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல் 3. அரசுகளிற்கு ஆலோசனை வழங்குதல் 4. உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அது தொடர்பான நடுநிலைக் கொள்கைகளை உருவாக்குதல்.

English

See Food and Agricultural Organization (FAO).