fear

அச்சம், பயம், நேரவிருக்கும் தீமை (அ) ஆபத்தால் ஏற்படும் வேதனையூட்டும் மனக்கிளர்ச்சி, அஞ்சுதல், அச்சம்

தமிழ் விளக்கம்

உண்மையான அல்லது கற்பனையான அபாயத்திற்கு உடலாலும், மனதாலும் எதிர்வினையாற்றுதல். பயம் (fear) என்பது, மகிழ்ச்சி, துக்கம் மற்றும் கோபம் போன்ற ஒரு உணர்ச்சி வெளிப்பாடாகும். பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவ்வப்போது ஏற்படும் தற்காலிகப் பயமாகவும் இருக்கலாம். நம் மூளையிலுள்ள இருபக்க டெம்பொரல் லோபின் உட்புறம் உள்ள 'அமிக்டலா' என்னும் திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான அடிப்படை மூளை அமைப்பாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது. தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறி. ஒருவர்க்கு பயம் ஏற்படும்போது கண்களை அகல விரிப்பது, கண் இமைகளைச் சுருக்குவது, வாய் மற்றும் உதடுகளைச் சுழிப்பது ஆகிய மாறுபட்ட முக பாவனைகள் உண்டாகின்றன. பயத்தில் கண்களையும் இறுக்கமாக மூடிக் கொள்கின்றனர். உடல் தசைகள் விறைப்பாகி வேர்க்கிறது. உடல் நடுக்கமும், படபடப்பும் ஏற்பட்டு மயங்கி நினைவிழக்கின்றனர். இதயத் துடிப்பும் அதிகமாகிறது. நூற்றுக்கணக்கான பயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பயத்தைப் பற்றி அமெரிக்க இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 10 வகையான பயங்களைப் பட்டியலிடப்பட்டனர். அவையாவன 1. தீவிரவாதத் தாக்குதல்கள், 2. சிலந்திகள், 3. இறப்பு, 4. முயற்சியில் தோல்வி, 5. போர், 6. உயரங்கள், 7. குற்றவாளி / குழு வன்முறை, 8. தனிமை, 9. வருங்காலம் பற்றிய கவலை, 10. அணு ஆயுதப் போர் ஆகியவைகளாகும். பயங்கள் அளவற்றதாயினும் சில அபூர்வ பயங்களும் உள்ளன. அவையாவன 1. புல்லாங்குழலைப் பார்க்க, இசையைக் கேட்க பயம் - ஆலொ ஃபோபியா 2. சாக்லெட் போன்ற பொருட்கள் வாயின் உட்புறம் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்வதால் பயம் - அரக்கி புடிரோ ஃபோபியா 3. முழங்கால்களைப் பார்க்க, நினைக்க பயம் - ஜெனு ஃபோபியா 4. நீளமான சொற்களுக்கு பயம் - (Hippo) கிப்போ பொடோ மான்ச்ட் ரஸ் ஸ்ஃயுப்ட் அலிஓ ஃபோபியா 5. நூல் மற்றும் நூல்கண்டைப் பார்த்து பயம் - லினனோ ஃபோபியா 6. பாடல்களைப் பார்க்க, படிக்கப் பயம் - மெட் ரோ ஃபோபியா 7. ஷெல் மீன்களைக் கண்டால் பயம் - ஆஸ்ட் ரா கோனோ ஃபோபியா 8. மஞ்சள் நிறத்தைக் காண பயம் - ஃசாந்தோ ஃபோபியா 9. சிரிக்கப் பயம் - ஜீலியோ ஃபோபியா 10. பயம் என்று நினைத்தால் பயம் - ப்போபோ ஃபோபியா.

English

The emotional and physical reaction to an identifiable or perceived source of danger.