Federal Deposit Insurance Corporation (FDIC)

வைப்புத்தொகைக் காப்புறுதிக்கான மத்தியக் கழகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் மத்திய வங்கியில் உறுப்பினர்களாக உள்ள வங்கிகளில் வைக்கப்படும் பொதுமக்களின் வைப்புத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் கண்காணிப்பிற்கு உட்பட்ட 6638 நிதி நிறுவனங்கள், நஷ்டமடைந்தாலோ அல்லது வைப்புத்தொகை பெறமுடியாத நிலை ஏற்பட்டாலோ, குறைந்த பட்சமாக $250,000 வரைக்கும் இந்நிறுவனம் திருப்பி அளிக்க உத்தரவாதம் அளிக்கின்றது.

English

A government corporation that insures people's deposits in national and some state banks that are members of the Federal Reserve System. Depositors are assured that their funds, up to an amount specified in advance, will be returned to them in the event that the bank fails or has insufficient resources to meet all its obligations.