feminization of poverty concept
பெண்மைமயமாக்கப்படும் வறுமை என்ற கருத்தாக்கம்
தமிழ் விளக்கம்
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் என்று கண்டறியப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கையும், அது சமமற்ற சதவீதத்தில் அதிகரித்து வரும் நிலையைக் குறிக்கும் கருத்து. பெருகி வரும் விவாகரத்துக்கள், கன்னித் தாய்மை, மனைவிகளை நிராதரவாக்கிச் செல்லுதல், குடும்பங்களின் செயலிழப்பு போன்ற காரணங்களால் வேலை வாய்ப்புகளற்று குறைந்த வருமானமீட்டும் பெண்களே குடும்பச் சுமையை ஏற்று கணவன் துணையில்லாமல் குழந்தைகளைப் பராமரிக்க நேரிடுவதால் எளிதில் பெண்கள் இடர்பாடுகளுக்குள்ளாகி வறுமை வயப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் கோட்பாடு.
English
The fact that women, especially those raising children without husbands or significant others, are far more vulnerable to being poor. The high rate of divorce, unwed motherhood, family breakdowns, and the burden of child care tending to fall on the mothers, many of whom have not had good employment experience, result in gender-skewed poverty rates.