FERA

அவசரகால நிவாரணத்திற்கான மத்திய நிர்வாகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க மாநிலங்களுக்கு அவசர கால உதவி அளிக்க ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாய் இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். ஹாரி ஹாப்கின்ஸ் (1890-1946) என்ற சமூகப் பணியாளர் இதன் முதல் இயக்குனராயிருந்தார். இதன் செயல்பாடுககளை நிர்வகிக்க மாநில அளவிலும் உள்ளூர் அளவிலும் அனுபவமிக்க சமூகப்பணியாளர்கள் பணியிலமர்த்தப்பட்டார்கள்.
ஹாப்கின்ஸ், ஹாரி (1890–1946) சமூகப்பணியாளர். அமெரிக்க அரசின் நெருக்கடிகால (ஊற்றுழி) நிவாரணப் பணிகளின் நிர்வாகி. அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தொடங்கிய புதிய ஒப்பந்தம் திட்டத்தின் ஆலோசகர். ரூஸ்வெல்ட் அமைச்சரவையில் வர்த்தகத் துறை ஆலோசகராகவும் செயல்பட்டார். ஆரம்பத்தில் ஏழைகளை மேம்படுத்தும் சங்கத்தில் பணியாற்றினார்.

English

See Federal Emergency Relief Administration (FERA).