fertility

கருவுறுதிறன், கருவுறுதல், கருக்கட்டுதன்மை, கருத்தரிப்புத் திறன், கருவளம், பொலிவுத்திறன், சூல் கொள்தன்மை, செழிப்பம், உயிரனங்களின் இனப்பெருக்கத் திறன்

தமிழ் விளக்கம்

கருவுறல் என்பது சந்ததியை உருவாக்க உயிரனங்களுக்கு இருக்கும் இயல்புத் திறன். கருவுறல் என்பது இனப் பெருக்கத் திறனிலிருந்து (பாலின உயிரணுக்கள் உற்பத்தி திறன்) வேறுபட்டது. கருவுறாமை என்பதை மலட்டுத்தன்மை என்பர். மனிதர்களில் கருவுறல் என்பது ஊட்டச்சத்து, பாலிச்சை, நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பாடு, பாலுறவு கொள்ளும் நேரம், பொருளாதாரப் பின்னணி, வாழ்க்கை முறை போன்ற பல காரணிகளைச் சார்ந்துள்ளது.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், சில ரசாயன மாற்றங்கள் உண்டாகி,. கருப்பையில் கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு உதவும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். மாத விலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் நெடி, மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும், மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு, புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை போன்ற அறிகுறிகள் இருந்தால் ஒரு பெண் கருத்தரித்திருகிக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

English

The biological capacity to reproduce.