fetus
கர்ப்பத்தில் நன்றாய் வளர்ந்த சிசு, உருப்பெற்ற கரு, 28 வாரம் முதிர்ந்த கரு, கர்ப்பத்திலுள்ள சிசு
தமிழ் விளக்கம்
உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி, பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்தி, கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து, கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும். முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது. விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக, மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக மில்லியன் விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளே நுழைந்துவிடும். உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோசோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப்பெருகும். இது இரண்டு வாரங்களுக்குட்பட்ட வளர்ச்சியாகும். இரண்டு மாதம் வரை வளர்ச்சியடைகின்ற இந்த கட்டம் எம்பிரையோ Embryo என்றழைக்கப்படும். இதன் பிறகு கருவை பேடஸ் Fetus என்று கூறுகின்றோம். இந்த நிலையில் இது ஒரு புழுவைப்போன்று 1 இன்ச் அளவுதான் இருக்கும். அதனால் தான் நமது பெண்கள் ஏதேனும் புழு, புச்சி உண்டாகி இருக்கிறதா என்று கேட்பார்கள். இதற்கு மேலும் வளருகின்ற கருவைத் தான் குழந்தை என்று அழைக்க இயலும்.
English
An unborn infant; usually the term is applied to developing human organisms from the third month after conception until birth. Development from the ninth week consists primarily of the refinements of existing organ systems and increases in size.