feudalism
நிலப்பிரபுத்துவம், நிலப்பண்ணை உரிமை முறை
தமிழ் விளக்கம்
மத்திய கால ஐரோப்பாவில் இருந்த சமூக அமைப்பு முறை. இது மூன்றடுக்கு கொண்ட முறை. பிரபுக்கள், குத்தகைதாரர்கள், குடியானவர்கள் / பண்ணை அடிமைகள் என்ற மூன்றடுக்கு நடைமுறை கொண்டது. இதன்படி அரசரிடமிருந்து பிரபுக்கள் நிலத்தைப் பெற்று, அதற்கீடாக அரசுக்கு இராணுவ சேவை புரிந்தனர். பிரபுக்களிடமிருந்து குத்தகைதாரர் குத்தகைக்கு நிலங்களைப் பெற்று அதைக் குடியானவர்கள் அல்லது பண்ணை அடிமைகளுக்குத் தருவார். நிலத்தைப் பெற்றதற்கு ஈடாக அவர்களும் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கையும், மரியாதையையும் தரவேண்டும்.
English
The socioeconomic and political system in medieval Europe in which people of high social rank were given land grants (fiefs) by people of even higher rank in exchange for tax payments and the military services of those who managed and worked the land.