field instruction

Field: பணி செய் களம் Instruction: அறிவுரை, கற்பித்தல், களப்பணியில் செய்ய வேண்டியவை பற்றி செயலுறுத்தும் போதனை / களத்தில் கற்பிப்பு, செயலுறுத்தக் கட்டளை, களப்பணியில் செய்ய வேண்டியவை பற்றிய குறிப்பு

தமிழ் விளக்கம்

களப்பணி என்பது சமூகப்பணிக்கல்வி கற்றலின் ஒருங்கிணைந்த போதனாமுறை. இம்முறையில் மாணவர்கள் அனுபவம் மிக்க சமூகப்பணியாளர் மேற்பார்வையில் தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள், சமுதாய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, பிரச்சனைகள், அதன் காரண காரியத் தொடர்புகள், அதைக் கையாளும் வழிமுறைகள் போன்றவற்றை வகுப்பறையில் பெற்ற தெளிவோடு ஒப்புமைப்படுத்தி ஒருங்கிணைத்துக் கொள்ளவும், சமூகப்பணியின் தொழில் நெறிமுறைகளுக்கு உட்பட்டுத் தீர்வு காணவும் கற்றுக்கொள்ளும் முறை. கர்மத்தையும், ஞானத்தையும் ஒருங்கிணைக்கும் முறை.

English

In social work education, an integral part of the BSW and MSW educational curricula, providing students with supervised opportunities to engage in direct social work practice with individuals, families, groups, communities, and organizations. Students are helped to refine professional skills, acquire and solidify social work values, and integrate the knowledge acquired in the academic setting with that obtained in the field.