field placement

களப்பணி செய் வாய்ப்பு, களப்பணி செய்ய அமர்த்துதல்

தமிழ் விளக்கம்

வகுப்பறை போதனையோடு களப்பணி அனுபவமும் இணைந்தது சமூகப்பணிக்கல்வி போதனா முறை. களப்பணியில் ஈடுபடுவதென்பது சமூகப்பணிக் கல்வியோடு இணைந்த கற்பித்தல் மற்றும் கற்றல் முறை. இது (வகுப்பறை போதனையோடு, களப்பணிப் பயிற்சியும்) ஒரே நேரத்தில் / உடன் நிகழும் பணி அனுபவம் - அறிதலையும், செயலையும் இணைக்கும் களம்.. இம்முறையில் களப்பணியில் கற்றுக்கொண்டதை வைத்து வகுப்பறையில் கற்றுக்கொண்டதை செம்மைப்படுத்தவும், வகுப்பறையில் கற்றுக்கொண்டதை வைத்து களப்பணிச் செயல்பாடுகளைச் செழுமைபடுத்தவும் உதவும் கற்றல் முறை. வாரத்தில் 16 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை, இரு நிலை மேற்பார்வையாளர்களோடு (கல்லூரி மேற்பார்வையாளர் மற்றும் களப்பணி செய்யுமிடத்தில் மேற்பார்வையாளர்) களப்பயிற்சி நெறிப்படுத்தப்படும்.

English

A part of the social work student’s formal educational requirement, consisting of ongoing work in a community social agency. The MSW student typically is given a work assignment (of 16 to 20 hours weekly) in one agency during the first training year and assigned to another agency with about the same time requirements during the second year. The student receives close supervision by agency personnel and has the opportunity to integrate, use, and apply classroom content to practical experiences. Field placements also exist in undergraduate (BSW) social work programs and in some doctoral programs. See also concurrent placement and block placement.