field study

நேரில் கண்டறிதல் / கற்றல், தல ஆய்வு, பணிக்கள ஆய்வு

தமிழ் விளக்கம்

ஆய்வகம், நூலகம், பணிபுரியுமிடம் போன்ற செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட இடங்களில் இல்லாமல், இயற்கையான சூழ்நிலையில் (உ.ம். மக்கள் வாழுமிடங்கள், நிகழ்வு நடக்குமிடங்கள்) ஒன்றைப்பற்றித் தெரிந்துகொள்வதும், விசாரணைக்கு உட்படுத்துவதுமான முறை. இதில் சமூகப்பணியின் ஒவ்வொரு துறையும் தங்கள் துறைகளுக்கென்று பிரத்தியேகமான அறிதல் முறைகளை வடிவமைத்துள்ளது. இயல்பாக உரையாடுதல் (informal interviews), நேரடியாகப் பார்வையிடல் (direct observation), குழுவின் செயல்களில் பங்கேற்றல், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அன்றாடப் பாடுகளை அறிதல், பலருடைய கருத்துக்களை தொகுத்து மதிப்பீடு செய்தல், தன்னையும் தான் அறிந்ததையும் ஒப்பிட்டு சுயபகுப்பாய்வு செய்தல் போன்ற முறைகள் சமூகப்பணியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

English

A social research method of investigating subjects in their natural environments instead of in a laboratory or clinician's office. For example, a social worker doing research in a ghetto would stay in that neighborhood making systematic observations for an extended period.