fields of practice

செயல்பாட்டுத் தளம் (சமூகப்பணியின் செயல்பாட்டுத் தளம்)

தமிழ் விளக்கம்

சமூகப்பணியென்பது மிகப்பரவலான, பரந்துபட்ட செயல் விளைவுகளையுடைய, பலமுறைகளை உள்ளடக்கிய தொழில் முறை. அதில் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதென்பதும், அதைச் செய்வதென்பதும் ஒரு சமூகப்பணியாளரால் இயலாது. ஆகையால் சமூகப்பணியை, அது எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்குமான தேவைகள், அந்த தேவைகளைக் கையாளச் சமூகப்பணியாளருக்குத் தேவைப்படும் திறன்கள் போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் முறை. 1920 ஆம் ஆண்டுகளில், துறை சார்ந்த இம்முறை நடைமுறைக்கு வந்தது. ஆரம்ப கட்டத்தில் குடும்பநலம், குழந்தைகள் நலம், மனநோய் மருத்துவ சமூகப்பணி, மருத்துவ சமூகப்பணி, பள்ளி சமூகப்பணி, சமுதாய அமைப்பும் அதன் பல்வேறு பொறுப்புகளும் என்று பல தொழில்முறைத் தளங்கள் இருந்தன. இன்று மனநோய் மருத்துவ சமூகப்பணியும், மருத்துவ சமூகப்பணியும், மேலும் பல தொழில் முறைகளாக விரிவடைந்துள்ளது. இப்பொழுது முதியோருடனான சமூகப்பணி, தொழில்வழி சமூகப்பணி, கிராம சமூகப்பணி, குற்றதடுப்பு சமூகப்பணி மற்றும் சட்டம் சார்ந்த சமூகப்பணி என்று பல பிரிவுகளாக பரிணமித்து வளர்ந்துள்ளது.

English

The social work term pertaining to the profession’s various practice settings and the special competence needed to work in those settings. Fields of practice were established by the 1920s when it became apparent that social work practice itself was so far-reaching that it was becoming difficult for individuals to encompass. The first fields of practice included family welfare, child welfare, psychiatric social work, medical social work, and school social work. These fields have, to some extent, subsequently changed their names and their focus (for example, from psychiatric social work to“social work in mental health,”and from medical social work to“social work in health care”), and new ones have emerged. They now also include occupational social work, geronto-logical social work, rural social work, police social work, and forensic social work.