financial management

நிதி மேலாண்மை / நிர்வாகம்

தமிழ் விளக்கம்

வருமானம் மற்றும் செலவினங்களைத் திட்டமிடுவதும் மற்றும் கட்டுப்படுத்துவதும், எந்தச் செலவினங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, எப்பொழுது, எந்த அளவு பொருட்களை வாங்குவது, விரயத்தை எப்படித் தவிர்ப்பது, வரவு செலவுகளுக்கு முறையாகக் கணக்கெழுதுவதுமான பொறுப்புகள் இதில் அடங்கும். நிதி நிர்வாகம் சமூகப்பணியின் ஒருங்கிணைந்த அங்கம். சில நேரங்களில் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை சமூகப்பணியாளர்கள் கற்றுத்தர வேண்டியிருக்கும்.

English

The planning, control, and direction of one's income and expenditures. This includes appropriate recording and bookkeeping, establishing and implementing consistent priorities and timing for purchasing decisions, minimizing waste, and budgeting. Social work administrators are concerned with financial management as an integral part of their managerial responsibilities. Social workers in direct practice often teach or help some of their clients plan and control their finances. See also administration in social work.