Folks, Homer
போக்ஸ் ஹோமர் (1867-1963)
தமிழ் விளக்கம்
போக்ஸ் ஹோமர் (1867-1963) - குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்ட முன்னோடி. ஆரம்பத்தில் நியூயார்க் நகரின் பாலர் உதவிச் சங்கத்தில் பொறுப்பிலிருந்தார். குழந்தைகளைப் பராமரிக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை அனாதை இல்லங்களில் அடைத்து வைக்கும் பாலர் உதவிச் சங்க செயல்பாடுகளோடு முரண்பட்டு, குழந்தைகளைப் பெற்றோரிடத்திலேயும் சமூகத்தில் வைத்தே பராமரிக்க வேண்டும் என்று செயல்பட்டவர். அவர் எழுதிய ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட, குற்றமிழைக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் முறைகள் என்ற புத்தகம் குழந்தைகள் நலனில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது.
English
(1867–1963) A child welfare reformer, he worked at the Children's Aid Society in New York but disagreed with their methods. He became an advocate of home placement of orphans and juvenile delinquents and urged an end to child dumping in orphanages and almshouses and unsupervised placing-out programs. In 1904 he wrote the influential text Care of Destitute, Neglected, and Delinquent Children.