Food and Agricultural Organization (FAO)

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக்கான அமைப்பு

தமிழ் விளக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. இத்தாலியிலுள்ள ரோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டியங்குகிறது. இவ்வமைப்பு மக்களின் போஷாக்கை அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை (விவசாய) மற்றும் உணவுப் பொருட் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை முன்னேற்றி பசி பட்டினியை நீக்கப் பாடுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பளிகள், உணவு, வீடுகள், சிறகவரை போன்றவற்றைத் தேவையானவர்களுக்கு இவ்வமைப்பினூடாக வழங்கியுள்ளன. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது 'ரொட்டியாவது கிடைக்க வேண்டும்' என்பதாகும். இவ்வமைப்பானது 1945 இல் கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சிலகாலம் வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டும், பின் 1951 ஆம் ஆண்டு முதல் ரோமைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. 190 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்டது. இந்த அமைப்பு துவங்குவதற்க்கான முதல் விதை, 1971 ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த ஐரோபிய வேளாண் மாநாட்டில் (European Confederation of Agricultire) கலந்துகொண்ட அறிஞர்களால் ஊன்றப்பட்டது. இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள் 1. வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரித்தல் 2. ஊட்டசத்து (போஷாக்கு), உணவு, விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல் 3. அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல் 4. உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அது தொடர்பான நடுநிலைக் கொள்கைகளை உருவாக்குதல்.

English

An agency of the United Nations established in 1945 to improve the world's agricultural production and distribution and to enhance the nutritional level of all peoples. It devises plans for improving yields in agriculture, oceans, and forests and also supervises research to improve seeds and hybrid crops and to develop fertilizers and pesticides.