Food and Drug Administration (FDA)
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
தமிழ் விளக்கம்
The Food and Drug Administration (FDA or USFDA)) என்பது அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் இயங்கும் அமைப்பாகும். மக்கள் உண்ணும் உணவு மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, மற்றும் அதன் மதிப்பு போன்றவற்றைக் கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட அரசின் அமைப்பு. இந்த நிறுவனம் உணவு, மருந்துப் பொருட்களைச் சட்டக் கட்டுப்பாடுகள் மூலமாகவும், கண்காணிப்பு, மேற்பார்வை மூலமாகவும் நிர்வாகித்து பொது மக்களின் நலத்தைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. அமெரிக்காவில் விற்கப்படும் எந்தவொரு மருந்தும் இந்த நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
English
A federal program, established in 1931 and now part of the U.S. Department of Health and Human Services (HHS), that maintains standards and conducts research on the safety, reliability, and value of food and drug products available for human consumption.