food assistance programs
உணவு உதவித் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
உணவு என்பது உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திட மற்றும் திரவப் பொருட்களைக் குறிக்கும். மனிதர்கள் தங்களது வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றனர். இந்திய மக்களில் பெரும்பான்மையினர் வறியவர்களாயிருப்பதால், இவர்களில் கணிசமானவர்கள் தமது அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்ய முடியாதவர்களாக உள்ளனர். மேலும் ஊட்டக்குறை ஒரு பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் பல்வேறு நலக்கேடுகளை இந்த மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். உலகெங்கிலுமுள்ள ஏழைகளுக்குப் போதுமான உணவு கிடைக்க அந்தந்த நாட்டு அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பலதிட்டங்களைச் செயல்படுத்துகின்றன. கல்விக்கான உணவு, வேலைக்கான உணவு, தாய் சேய் ஊட்டநலம் என்று பல்வேறு உணவு உதவித் திட்டங்கள் பல நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் (ஆங்கிலம்: National Food Security Bill - India) என்பது உணவை ஒர் அடிப்படை மனித உரிமையாக உறுதிசெய்து முன்மொழிந்துள்ள சட்டமாகும். இது ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இச் சட்டத்தால் சுமார் 67% அல்லது 80 கோடி ஏழை மக்கள் பலன் அடைவாரென்று இச் சட்டத்துக்கு ஆதரவானோர் கூறுகின்றார்கள்.
English
Social welfare benefits for eligible people to assure that their nutritional requirements are met. The major food assistance programs in the United States are managed by the U.S. Department of Agriculture (USDA) and include the Food Stamp program, the school breakfast and School Lunch program, and the WIC program. USDA also arranges the donation of surplus agricultural products to some charitable institutions and nonprofit summer camps.