Food Stamp program

உணவு அடையாளச் சீட்டு / படிவம், பணமோ, பணயுதவியோ பெறுவதற்காகக் கொடுக்கப்படும் படிவம்

தமிழ் விளக்கம்

வறுமையில் வாழ்பவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, வழங்கப்படும் உணவிற்கான அடையாள அட்டைகள் / கூப்பன்கள். வரையறுக்கப்பட்ட பண மதிப்புள்ள அட்டைகளைக் கொண்டு, இந்த அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் எந்தக் கடையிலும் உணவு, விதைகள், செடிகள் மற்றும் சமைத்த உணவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டைகளைக் கொண்டு ஆல்கஹால், புகையிலைப் பொருட்களையோ அல்லது அரசால் பட்டியிலிடப்பட்ட / தடை செய்யப்பட்ட பொருட்களையோ வாங்கமுடியாது. அமெரிக்க அரசின் வேளாமைத் துறையினரால், 1964 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டம், அமெரிக்க மாநில அரசுகளின் சமூக நலத் துறைகளால் நிர்வகிக்கப்படுகிறது.

English

A federal food assistance program, enacted in 1964 and administered by the U.S. Department of Agriculture (USDA) through state welfare departments. Coupons are distributed to needy eligible individuals and families to be used like cash in participating stores to purchase most foods, plants, seeds, and sometimes meals-on-wheels, but not alcohol or tobacco products. The objective is to improve the diets of low-income households by supplementing their food-purchasing ability.