force field analysis (FFA)

இயக்காற்றல் / இயங்குதிறம் / தாக்காற்றல் பகுப்பாய்வு

தமிழ் விளக்கம்

சமூகநலப் பணி நிர்வாகம் மற்றும் சமுதாய அமைப்புப் பணிகளில், ஒரு திட்டக் குறிக்கோளை அடைவதற்கான சாதகங்கள் (ஆதரவு / உந்து சக்திகள்), பாதகங்களை (எதிர்ப்பு / கட்டுப்படுத்தும் சக்திகள்) அடையாளம் காண உதவும் பகுப்பாய்வு. ஒரு திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் போது, (திட்டத்தின் பயனின்மையை மாற்றவோ, திட்டச் செலவுகளைக் குறைக்கவோ) அதற்கு ஆதரவானவர்கள் யார்? அதற்கு எதிர்ப்பானவர்கள் யார் (செலவைக் குறைப்பதால் பணி இழக்க நேர்பவர்கள், திறமைக்குறைவால் பணி இழக்க நேர்பவர்கள்) மாற்றங்களை எதிர்ப்பார்கள். இதையெல்லாம் உணர்ந்து ஆதரவை எப்படி அதிகப்படுத்தி, எதிர்ப்பைக் குறைப்பதற்கு திட்டமிடக் கற்றுத் தருவதுதான் இயக்காற்றல் / இயங்குதிறம் / தாக்காற்றல் பகுப்பாய்வு எனப்படும்.

.

English

A problem-solving tool often used in social welfare planning, administration, and community organization for assessing the degree of resistance or receptivity to a proposed change. FFA includes listing the social forces that push for change (such as high costs of the existing program or ineffectiveness in reaching stated goals) and then listing those forces expected to obstruct change (such as the existing personnel's fear of losing job security or authority). FFA then delineates actions that can be taken to increase or decrease certain forces so as to facilitate movement toward the desired goal.