formal operations stage
ஊகித்தறியும் திறன் அல்லது ஒன்றிலிருக்கும் மறைபொருளை அறியும் திறன் .(formal operation stage)
தமிழ் விளக்கம்
மனிதரின் அறிதல் திறன் நான்கு நிலைகளில் ஏற்படுவதாக ஜீன் பியாஜியே கண்டறிந்தார். அவையாவன 1. தொட்டுணர்வதால் ஏற்படும் அறிவு வளர்ச்சிப் பருவம் அல்லது புலன் இயக்கச் சிந்தனை வளர்ச்சி (sensorimotor stage - birth to age two - பிறப்பிலிருந்து 2 வயது வரை). இந்தப் பருவத்தில் பல்வேறு பொருட்களை / தன்னைச் சுற்றியுள்ள உலகை, மொழி உதவியின்றி புலன்களின் வழியேயும், உடலியக்கங்கள் வழியும் அறிந்து கொள்வது. 2. முற் சிந்தனை வளர்ச்சி இப்பருவத்தில் குழந்தைகள் சிந்திக்க ஆரம்பித்திருந்தாலும், எல்லாவற்றையும் தேவைகள், பயன்களுக்கு ஏற்பப் பொருள் கொண்டு, மற்றவர்களின் தருக்கங்களை / நியாயங்களை புரிந்துகொள்ளமுடியாது (pre operational stage 2. வயதிலிருந்து 7 வயது வரை) 3. பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி அவர்களால் உருவுள்ள ஸ்தூலமான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களிலிருக்கும், பிறரின் சிந்தனையிலிருக்கும் மறைபொருளையும், அனுமானங்களையும் புரிந்து கொள்ள இயலாது (concrete operation stage- 7 வயதிலிருந்து 11 வயது வரை) 4. முறையான சிந்தனை வளர்ச்சி இப்பருவத்தில் தருக்க (logic) அறிவையும், ஊகித்தறியும் திறனையும், ஒன்றிலிருக்கும் மறைபொருளையும் அறியும் திறன் மேம்படும்.(formal operation stage - 11 வயதிற்கு மேல்) இந்த நான்கு நிலைகளிலும் அறிவிற்கான அடிப்படை கட்டுமானக் குறியீட்டுத் தொகுதிகள் (schemas) எப்படி உதவுகிறது என்பதையும், அது ஒரு வளர்ச்சி நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எப்படி மாற்றி அமைக்கப்படுகின்றன என்பதையும் அவர் விளக்கினார்.
English
In Piagetian theory, the developmental stage that occurs during adolescence and that is characterized by greater flexibility in thought, increasing ability to use logic and deductive reasoning, the ability to consider complex issues from several viewpoints, and a reduction of egocentrism.