foster care
அன்பாக வளர்த்தல், சீராட்டுதல், அணைத்தாதரித்துப் பேணுதல், வளர்ச்சிக்குத் துணைசெய்தல், ஆதரித்து இடமளித்தல், மனத்தில் வைத்துப்பேணுதல், சாதகமாயுதவுதல், அனுகூலமாயுதவுதல்
தமிழ் விளக்கம்
ஒரு குழந்தையை சட்டபூர்வமாக சுவீகரித்துக் கொள்ளாமல் / தத்தெடுக்காமல், அக்குழந்தையைப் பெற்ற, பெற்றோர் மாதிரியே அன்பு செலுத்தி கவனித்துக்கொள்வது.
குற்ற சுபாவமுள்ள குழந்தைகள், பாதுகாப்பற்ற, புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிற்கினையான மாற்று இடத்திலோ அல்லது ஒரு நிறுவனத்தில் வைத்தோ பராமரிப்பது. குழந்தைகளை அணைத்தாதரித்துப் பேணும் இந்த செயல்முறையில் சமூகப்பணியாளரின் பங்கு முக்கியமானது. எந்த மாதிரியான குழந்தைகளுக்கு வளர்த்துப் பேணும் வளர்ப்பான்கள் தேவை என்று தீர்மானிப்பதும், வளர்ப்பு இல்லங்களிலுள்ள வசதிகளை மதிப்பீடு செய்வதும், ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும், அவர்களை எப்பொழுது அவர்களின் சொந்தப் பெற்றோரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதும் சமூகப்பணியாளரின் பொறுப்பு.
கடந்த காலத்தில் வீடற்ற, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த சிறுவர்களைக் கைத்தொழில் கலைஞரிடமோ, வணிகரிடமோ வேலைக்கு அமர்த்தி கூலிக்குப் பதிலாக உணவு மற்றும் உறைவிட வசதி பெற்றுவந்த நடைமுறையே பரிணாமம் பெற்று, வளர்த்துப் பேணும் நிலையை எட்டியுள்ளது. குழந்தை வளர்ப்பில் மட்டும் இருந்த இந்தப் பழக்கம் இன்று உறைவிட வசதியுடன் கூடிய முதியோர் பராமரிப்பு, மனநோயாளிகளைப் பராமரித்தல், ஊனமுற்றவர்களைப் பராமரித்தல் போன்ற பல்வேறு தளங்களில் பின்பற்றப்படுகின்றது.

English
The provision of physical care and family environments for children who are unable to live with their natural parents or legal guardians. Foster care is typically administered by county social services departments. Their social workers evaluate children and their families to help legal authorities determine the need for placement, evaluate potential foster homes as to their appropriateness for placing the particular child, monitor the foster home during the placement, and help the legal authorities and family members determine when it is appropriate to return the child to the natural family. The precedent for foster care in the United States originated largely with apprenticing and indenture, procedures in which homeless youths were placed in the care of a merchant or craftsperson for instruction and lodging in exchange for work. The term“foster care”also applies to full-time residential care for older, developmentally disabled, or mentally ill adults. See also adult foster care.