fourth force

மேலோட்டமான மன உணர்வுகளைக் கடந்த உள்ளுணர்வு கொண்டு மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்குச் சேவை செய்யவும் உதவுகின்ற உளவியல்

தமிழ் விளக்கம்

இது உளவியலின் நான்கு கண்ணோட்டங்களில் ஒன்று.
முதல் நோக்கு - விக்டோரியா அரசியின் காலத்தில் உருவான கட்டுப்பாடான, ஒழுக்க விதிகளைப் பின்பற்ற முடியாமல் ஏற்பட்ட மனநோய்களையும், அகமுகப் பார்வையையும் அடிப்படையாகக் கொண்ட உள இயக்கக் கோட்பாடுகளையும் உளப் பகுப்பாய்வையும் வலியுறுத்திய உளவியல் முறைகள். இரண்டாம் நோக்கு - வெளிச் சூழலின் தூண்டுதலுக்கு உள்ளாகி வெளிப்படுத்திய புறவயமான நடத்தைகளை அடிப்படையாகக் கொண்ட நடத்தை உளவியல்.
மூன்றாம் நோக்கு - தன்னுணர்வு, சுய இயல்பாக்கத் (self actualization) தேவைகளை வலியுறுத்திய மனித இயல்பை மையப்படுத்திய உளவியல்.
நான்காம் நோக்கு - சுய இயல்பாக்கத் தேவைகளைக் கடந்து, மேலோட்டமான மன உணர்வுகளைக் கடந்து உள்ளுணர்வு கொண்டு மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு சேவை செய்யவும் உதவுகின்ற உளவியல். ?????????

English

The name given to a trans-personal psychology orientation toward understanding people and providing psycho-social services. It refers to the major orientations of psychological thought and therapy. The first force was the psychodynamic or analytical orientation that grew in the psychologically repressive Victorian era and focused on the psychopathology of inner-directed humans. The second force was the behaviorist orientation that focused on outer-directed human action and responses to the stresses faced in the environment. The third force was the humanistic, experiential, existential approach to therapy whose goal was self-actualization. The transpersonal fourth force goes beyond self-actualization toward a“trans-human”orientation centered in the connection of the soul and morality with the cosmos.