fourth party

நான்காம் தரப்பு

தமிழ் விளக்கம்

மருத்துவ சேவை வழங்குனர் அல்லது நலச்சேவை வழங்குனர், சேவையை பெறும் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர், அந்த சேவைக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்பவர் என்ற முத்தரப்பினருக்கும் இடைநின்று நிதியை நிர்வகிப்பவரை நான்காம் தரப்பு என்கின்றனர். இந்த நான்காம் தரப்பினர் வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணத்தை தானாகக் கொடுக்கமாட்டார். மாறாக மூன்றாம் தரப்பிலிருந்து (சேவைக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்பவர்) நிதியைப் பெற்று முதல் தரப்பினருக்கு (மருத்துவ சேவை அல்லது நலச் சேவை வழங்குனர்) வழங்குவார். இராணுவச் சேவை புரிந்தவர்களுக்கு, (சீருடைப் பணியாளர் Uniformed service) தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்படும்போது (CHAMPUS: Civilian Health and Medical Program of the Uniformed Services) அதற்கான செலவுகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவார்.

English

A fiscal intermediary between the provider of a health care or social service, the consumer of that service, and the organization that pays for the service. The fourth party does not provide the cash to cover the charges but provides administrative services for the cash provider (third party). For example, the U.S. government is the third party for the CHAMPUS program, which pays health care providers for their treatment of dependents of military personnel. But in most locales, CHAMPUS contracts with a private insurance company, such as Blue Cross–Blue Shield (the fourth party), to process the administrative details.