franchising

ஒப்போலை உரிமை, (வாக்கு) உரிமை, வாக்குரிமை

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒரு தனிமனிதருக்கோ பிறிதொரு நிறுவனத்திற்கோ, தங்கள் சார்பாக சில பொறுப்புக்களை எடுத்துச் செய்ய அல்லது குறிப்பிட்ட இடத்தில் தங்களின் பொருட்களை / சேவைகளை விநியோகிக்கக் கொடுக்கும் அங்கீகாரம். உதாரணமாக சமூகநலத் துறையில் ஒரு குறிப்பிட்ட திட்டப் பயனாளிகள் பற்றிய தகவல்களை அறிய அரசுப்பணியில் இல்லாத சமூகப்பணியாளர்களை தற்காலிகமாக அமர்த்தி தகவல் சேகரிப்பது. தண்டனை பெற்ற குற்றவாளிகளைத் தனியார் நடத்தும் சிறைச் சாலைகளுக்கு அனுப்பி வைத்து தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பை அளிப்பது.

English

The process by which one organization grants another organization, group, or individual the right and obligation to fulfill one of its customary functions. For example, a state government might contract with a private company to provide penal facilities and services to some of its convict criminal population. Or a county government might engage a group of private social work practitioners to conduct all the investigations for foster care placements.