Freedom of Information Act

தகவல் அறியும் சுதந்திரத்திற்கான சட்டம்

தமிழ் விளக்கம்

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கையாளவேண்டியும், ஊழலைக் கட்டுப்படுத்தாவும், தவிர்க்கவும் வேண்டி அரசு அலுவலகங்கள், அரசுசார் நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதி செய்வது ஜனநாயக அரசுகளின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, அரசிடம் அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல் பெறுவதற்கு ஏதுவாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஒவ்வொரு இந்தியரும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். இச்சட்டத்தின்படி தகவல் தருவதில் தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் (அதிகாரி) மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது திருத்தப்பட்ட தகவல்களைத் தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கவும், மேலும் தலா 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் தகவல் ஆலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிகோலுகின்றது.

English

Federal legislation enacted in 1966 (P.L. 89-487) to establish the right of citizens to know (with specific exceptions) what information the government and some other organizations are keeping about them. For example, under certain circumstances, the act gives clients of federally administered health and welfare agencies the right of access to their case records. See also relative confidentiality and absolute confidentiality.