Freudian slip
பிராய்டின் வழுக்கல்
தமிழ் விளக்கம்
அடக்கி வைக்கப்பட்ட கோபம், உணர்ச்சி, வெறுப்பு, காமம் போன்ற ஆழ்மன உணர்வுகளை எதிர்பாராத விதமாகப் பேச்சிலோ, எழுத்திலோ தன்னையறியாமல் வெளிப்படுத்துவது. பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி தவறாக வாசிப்பது, தவறாகப் புரிந்துகொள்வது, பொருட்களை இடம்மாற்றி வைத்துத் தேடுவது, தற்காலிக மறதி போன்ற அறிகுறிகளும் இந்த வழுக்கல் வகைப்பட்டது என்று சொல்லப்படுகின்றது.
பார்க்க: parapraxis - நாச் சோர்வு, எதிர்பாராத பிழை, கவனக்குறைவால் ஏற்படும் பிழை, பிராய்டின் வழுக்கல், ஆழ்மன வெளிப்பாடு - கவனக் குறைவினால் பேச்சிலோ அல்லது எழுத்திலோ ஏற்படும் தவறு. இதன் மூலம் ஒருவரின் ஆழ்மன உணர்வுகள் வெளிப்படுவதால் இதைப் பிராய்டின் வழுக்கல் அல்லது நாத்தடுமாற்றம் என்றும் கூறுவர். எடுத்துக்காட்டாக முதியோர் உதவித் தொகை திட்ட பரிசீலனைக்கான வருபவரிடம், தன்னுடைய வயது 58 என்றாலும், கவலையினாலும், ஆதவற்றிருப்பதாலும் தன்னை எல்லோரும் 68 வயதிற்கு மேல்தான் கணிப்பார்கள் என்று அவரையுமறியாமல் உண்மையைப் பேசுவது

English
See parapraxis.