Freudian theory
பிராய்டின் கோட்பாடு
தமிழ் விளக்கம்
உளவியல் மேதை / உளவியலின் தந்தை என்றழைக்கப்படும் சிக்மண்ட் பிராய்டின்(1856-1939) கருத்துகள் மனித இனத்தின் வளர்ச்சியையும், மனித மனதையும் புரிந்துகொள்ள பெருமளவு உதவியது. நரம்பியல் மருத்துவரான இவர், உடல் ரீதியான பாதிப்பு எதுவும் இல்லாத நேரத்திலும், மனதால் மட்டுமே பாதிக்கப்படும் நோயாளிகளைப் பற்றி தனது கவனத்தைத் திருப்பினார். மனநோய், மனித உளவியல், கனவுகளின் உட்பொருள், மனச்சிக்கல், மனச்சிதைவு, மனித மனத்தின் பரிணாமம், அன்றாட வாழ்க்கையில் உளவியல் தாக்கம், மனித இனத்தின் பரிணாமம், சமூகம், மதம், மதத்தின் தோற்றம் போன்றவற்றைப் பற்றிய உளவியல் ரீதியான இவரது ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் மானுட வாழ்க்கையைப் புதிய கோணத்தில் புரிந்து கொள்ள பெரிதும் உதவியதால் இவர் பெரிதும் மதிக்கப்பட்டார். பிராய்டின் இயக்கவியல் உளவியல் (Dynamic Psychology) மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும். அது பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என விளக்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு மனநோய்களுக்கு சிகிச்சை செய்த விதம், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்கியது போன்ற கருத்துக்களால் சிக்மன்ட் பிராய்ட் உலகமெங்கும் அறியப்பட்டவர் ஆனார். சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை 1.உணர்வு மனம், (Conscious Mind), 2. உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind), 3. தொலை நோக்கு மனம். மூன்று பகுதிகளாகப் பிரித்து விளக்கியதும் மனதைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவியது. மேலும் மானிடரின் குண இயல்புகள் 1.உணர்வால் உந்தப்படும் இயல்பு - உணர்வு உந்தும் இயல்பு (Id), 2. நான் என்னும் முனைப்பு - முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), 3. மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு - அதியுயர் மனக் கூறு (Super Ego). என்ற மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறதென்றும், இந்த மூன்று உணர்வுகளுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை தீர்மானிக்கின்றது என்று விளக்கினார். மனிதரைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான தீர்வு காணவும், பிராய்டின் கருத்துக்கள் உதவியாய் இருக்கின்றன.
English
An integrated set of principles about human behavior and the treatment of personality disorders based on the ideas of Viennese neurologist Sigmund Freud (1856–1939) and his followers. Central concepts about personality development include the growing organization of drives (instincts, libido, pleasure principle, and reality principle), personality structure (unconscious, preconscious, and conscious), personality dynamics (id, ego, and superego), and the stages of psychosexual development (the oral phase, the anal phase, and the phallic phase). Treatment concepts include free association, catharsis, transference, and countertransference. See also psychoanalytic theory and psychosexual development theory.