FTE
முழுநேர வேலைச் சமானம்
தமிழ் விளக்கம்
முழுநேரச் சமானம் என்பது பனிச் சுமையை அளக்க உதவும் ஒரு அலகு. ஒரு பணியை முடிக்க ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளிக்கு / பணியாளருக்கு / மாணவருக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை வைத்து அளவிடப்படுகின்றது. முழுநேரச் சமானம் 1.0 என்று குறிக்கப்பட்டால் அது முழுநேரப் பணியாளருக்கு சமானம் என்று பொருள். அதுவே 0.5 என்று குறிக்கப்பட்டால் அதற்கு அரைநேரப் பணியாளர் என்று பொருள்.
English
Full-time equivalent, determined by the number of hours that staff work measured against the hours in a work-week. For example, if an agency's work-week is 40 hours and a program employs one staffperson 40 hours a week and another 28 hours a week, the program employs 1.7 FTEs.