Fundamental Rights in Indian Constitution

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகள்

தமிழ் விளக்கம்

அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள் மற்றும் அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது 7 அடிப்படை உரிமைகள் இருந்தன. 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் 6 அவை
1. சமத்துவ உரிமை பிரிவு (Art). 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிரிவு. 15 சாதி, சமய, இன, பால் (அ) பிறப்பு வேறுபாடு காட்ட தடை. பிரிவு. 16 அரசு வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு. பிரிவு. 16 (4) SC, ST -க்கு முன்னுரிமை பிரிவு. 17 தீண்டாமை ஒழிப்பு பிரிவு. 18 பட்டங்கள் ஒழிப்பு
2. சுதந்திர உரிமை (பிரிவு. 19- 22) பிரிவு.19 இது 6 சுதந்திரங்களை வழங்கியுள்ளது.1.பேச்சு (Freedom of Speech and expression) 2. ஒன்று கூடும் சுதந்திரம் (Freedom of Assembly) 3. சங்கம் அமைக்க (Freedom to form Association) 4. இந்தியா எங்கும் செல்ல (Freedom of Movement) 5. இந்தியா எங்கும் வசிக்க (Freedom of Residence & Settlement) 6. தொழில் செய்ய (Freedom of Profession, Occupation, Trade, Business) பிரிவு. 20 – சட்ட விரோதமாக குற்றம் சமத்துவதிலிருந்து பாதுகாப்பு. பிரிவு.21 – தனி நபர் சுதந்திரம். பிரிவு.21 A – 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி. பிரிவு. 22 கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவு. 23 – 24) பிரிவு.23 – சுரண்டலுக்கு எதிராகவும் கொத்தடிமை முறையை தடை செய்கிறது. பிரிவு.24.– 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்த தடை
4. சமய உரிமை (பிரிவு.25-28) பிரிவு.25 – விரும்பிய மதத்தை தழுவ உரிமை. பிரிவு.26 – மத விஷயங்களை நிர்வகிக்க உரிமை. பிரிவு.27 – மத அடிப்படையிலான வரிகளை தடுத்தல்.பிரிவு.28 – குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் கூட உரிமை
5. கல்வி, கலாச்சார உரிமை (பிரிவு.29 -30) பிரிவு.29 – சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல். பிரிவு.30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த உரிமை.
பிரிவு.31 – நீக்கப்பட்டது.
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் உரிமை பிரிவு 32 இது இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது - டாக்டர் அம்பேத்கர்
இது 5 நீதிப் பேரானைகளை வழங்குகிறது. 1. Writ of Habeas Corpus -ஆட்கொணர் நீதிப் பேராணை 2. Writ of Mandamus – கட்டளை நீதிப் பேராணை 3. Writ of Prohibition – தடை நீதிப் பேராணை 4. Writ of Quowarranto – உரிமையேது வினா நீதிப்பேராணை 5. Writ of Certiorari – ஆவணக் கேட்பு நீதிப் பேராணை

English

The Fundamental Rights is defined as the basic human rights of all citizens. These rights, defined in Part III of the Indian Constitution, apply irrespective of race, place of birth, religion, caste, creed or gender. They are enforceable by the courts, subject to specific restrictions. There are six fundamental rights enshrined in Indian Constitution. 1. Right to Equality, 2. Right to Freedom, 3. Right against Exploitation, 4. Right to Freedom of Religion, 5. Cultural and Educational Rights, 6. Right to Constitutional Remedies